என் மலர்
செய்திகள்

கைது
ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு- வாலிபர் கைது
ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக வாலிபரை போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சி வைரவன்பட்டியை சேர்ந்தவர் பெரியபொண்ணன். இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். தற்போது அவருடைய மனைவி, ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் பெரியபொண்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக, அதே ஊரை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் கோவேந்தன்(வயது 35) சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெரியபொண்ணன், உலகம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து, கோவேந்தனை கைது செய்தார்.
Next Story






