என் மலர்
செய்திகள்

அபராதம்
அறந்தாங்கி நகராட்சியில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.85 ஆயிரம் அபராதம் வசூல்
அறந்தாங்கி பகுதியில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.85 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளது.
அறந்தாங்கி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சாலை, புதுக்கோட்டை சாலை, பேராவூரணி சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் என முக கவசம் அணியாதவர்களிடம் நகராட்சி சுகாதாரத்துறையினர் ரூ.100 அபராதம் விதித்து, வசூல் செய்தனர். அறந்தாங்கி பகுதியில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.85 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






