என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரம்
    X
    கார்த்தி சிதம்பரம்

    மத்திய அரசின் கொரோனா ஊரடங்கு முழு தோல்வி- கார்த்தி சிதம்பரம்

    மத்திய அரசின் கொரோனா வைரஸ் ஊரடங்கு முழு தோல்வி என்று சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு அறிவித்த பொது முடக்கம் முழு தோல்வி அடைந்து விட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்பு விவகாரத்தில் தமிழக அரசு சொல்லும் எதையும் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. தற்போதைய இக்கட்டான சூழலில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயமாக தேவையில்லை. இது மாணவர்களை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

    புதுக்கோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 21-ம் நூற்றாண்டு கால கட்டத்திலும் இது போன்ற மூடநம்பிக்கைகள் நடப்பது வேதனை அளிக்கிறது. இந்த செயலில் ஈடுபட்டவர்களையும் ஈடுபட தூண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜோதிமணி விவகாரத்தில் நான் உட்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளோம். என்னைப் பொறுத்தவரையில் டி.வி. விவாதத்தில் பங்கேற்பது தேவையற்றது.

    கேரளாவில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி குண்டு வைத்து கொடுத்ததாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சம்பந் தப்பட்ட நபர்கள் மீது விலங்குகள் நலவாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசுடன் தமிழக அரசு நட்புறவுடன் உள்ளது. எனவே தமிழகத்திற்கு தேவையான நிதியை அவர்களே கேட்டு பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசு இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதியை வழங்கி வருகிறது. தமிழகத்திற்கு எந்தவித நிதியையும் வழங்கவில்லை என்றார்.

    Next Story
    ×