search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆற்காடு ரோட்டில் பேரிகார்டுகள் வைத்து வாகனங்கள் செல்லும் வழி 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது
    X
    ஆற்காடு ரோட்டில் பேரிகார்டுகள் வைத்து வாகனங்கள் செல்லும் வழி 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது

    பேரிகார்டுகள் வைத்து ஆற்காடு சாலையில் வாகனங்கள் செல்ல தனித்தனி

    கொரோனா பாதித்தவர்கள் வருகை காரணமாக ஆற்காடு சாலையில் பேரிகார்டுகள் வைத்து 3-ஆக சாலை பிரிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல தனித்தனி வழி அமைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஏராளமான வெளி மாவட்டத்தை சேர்ந்த கொரோனா பாதித்தவர்கள் படையெடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் முழுமையான தகவலை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    எனவே வெளி மாவட்டங்களில் இருந்து மருத்துவமனைக்கு கொரோனா பாதித்தவர்கள் வரும் வாகனங்கள் குறித்து கண்காணிக்க ஆற்காடு சாலையில் காகிதப் பட்டறையில் பேரிகார்டுகள் வைத்து இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல சோதனை சாவடி அமைக்கப்பட்டது. மேலும் காமராஜ் சிலை அருகே வாகனங்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஆற்காடு சாலையில் நேற்று காலை முதல் புதிய போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி காமராஜர் சிலை அருகே உள்ள சிக்னல் பகுதியில் இருந்து மருத்துவமனை உள்ளே செல்லும் வரை சாலையை 3 ஆக பிரித்து பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது. சிக்னல் பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லாதவர்கள் நடுப்பகுதியை பயன்படுத்தும் வகையிலும், மருத்துவமனைக்கு செல்பவர்கள் இடதுபுறத்தை பயன்படுத்தும் வகையிலும் தனித்தனியே வாகனங்கள் செல்லும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் குறித்த விவரம் முழுமையாக சேகரிக்கப்படுவதில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இது உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்திலும் போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டுகளை வைத்து போக்குவரத்தை பிரித்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். 
    Next Story
    ×