search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரடி
    X
    கரடி

    குன்னூர், கோத்தகிரியில் அட்டகாசம் செய்யும் கரடி கூட்டம்- பொதுமக்கள் பீதி

    நீலகிரியில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் சர்வசாதாரணமாக குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர், கொலக்கம்பை, கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் சர்வசாதாரணமாக குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கோத்தகிரி நகரப்பகுதியில் உள்ள 'டானிங்டன்' நியாயவிலை கடையில் இரவில் குட்டியுடன் வந்த கரடிகள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை நாசம் செய்துள்ளது மேலும் அதே பகுதியில் உள்ள பேக்கரி கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கரடிகள் தொடர்ந்து கடைகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி வருவதால் மரங்களில் கதவுகள் வைத்த கடைக்காரர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகையால் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் கரடிகள் மனிதர்களை தாக்கும் முன்பு கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×