என் மலர்
செய்திகள்

கைது
கூடலூரில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது
கூடலூரில் சாராயம் காய்ச்சிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
கூடலூர், விமலகிரி பகுதியில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குற்ற தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ., ராஜன் மற்றும் போலீசார் விமலகிரி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சரவணன் (48), என்பவர், வீட்டின் அருகே, 35 லிட்டர் சாராய ஊறல் தயார் செய்து பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
Next Story






