என் மலர்
செய்திகள்

வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்
வேலூரை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு- கலெக்டர் தகவல்
வேலூரை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள கம்மவான்பேட்டையை சேர்ந்த 32 வயது நபர் சென்னையில் கடந்த சில நாட்களாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பினார். இதுகுறித்து அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதற்கான முடிவு நேற்று காலை தெரியவந்தது.
அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்தது. பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் தாத்தா, பாட்டியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர் வீட்டுக்கு செல்லும் சாலையை அடைத்து அதிகாரிகள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல தொரப்பாடியை சேர்ந்த 26 வயது பெண்ணின் கணவர் சென்னையில் ஒரு மருத்துவமனையில் கால் பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உதவியாக இப்பெண்ணும் சென்னையில் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் வேலூர் திரும்பினர். இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் அவர்களின் சளி மாதிரியை எடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அவரின் கணவருக்கு பாதிப்பு இல்லை. எனினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுதவிர வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 55 வயது ஆண், சென்னை கொரட்டூரை சேர்ந்த 50 வயது ஆண், வேலூர் லட்சுமி புரத்தை சேர்ந்த 35 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Next Story