என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 7,393 வாகனங்கள் பறிமுதல்

    கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனை மீறி பலர் வெளியே வாகனங்களில் சுற்றினர். இதையடுத்து போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத் தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் பரமக்குடி, ராமேசுவரம், ராமநாதபுரம், திருவாடானை, கமுதி, சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

    தற்போது வரை மாவட்டத்தில் 4,445 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,891 பேர் கைதாகி விடுதலையாகி உள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறியதாக 7,393 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 7,223 இருசக்கர வாகனங்களும், 76 ஆட்டோக்களும், 151 கார்களும், 7 கனரக வாகனங்களும் அடங்கும். இது வரை 5,485 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 269 வழக்குகள் பதிவு செய்யப்படடு 397 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரை மாவட்டத்தில் 17,739 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23,758 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×