search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓம்சக்தி சேகர்
    X
    ஓம்சக்தி சேகர்

    ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக மாற்றம்- தமிழக முதலமைச்சருக்கு ஓம்சக்தி சேகர் பாராட்டு

    ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக மாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழக முதல்-அமைச்சருக்கு புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் வழிகாட்டியாக முன்னோடியாகப் புரட்சித் திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள் தொண்டாற்றியவர் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவார். தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் காவலர்கள், அம்மா உணவகம் என உலகமே வியந்து பாராட்டும் திட்டங்கள், அத்தனையும் ஏழை எளியவர்க்கும் பெண்களுக்குமான வாழ்வியல் திட்டங்கள்.

    பெண்குலத்தின் பொன்விளக்காகத் திகழ்ந்து தமிழக மக்களின் நல்வாழ்வுக்காகத் தம்மையே அர்ப்பணித்துத் தவ வாழ்க்கை வாழ்ந்த வேதா இல்லம் புரட்சியின் விலாசம்.

    பல்வேறு அரசியல் எதிர்ப்புகளுக்கிடையிலும், வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கிய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் மற்றும் 1½ கோடித் தொண்டர்களும், பத்துக்கோடித் தமிழ்மக்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

    இல்லம் நினைவிடமாக மாற வேண்டும் என்பது ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனின் எண்ணம். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கோடான கோடி உண்மைத் தொண்டர்களில் நானும் ஒருவனாக புதுவை மக்களின் சார்பாகவும் அ.தி.மு.க. தொண்டர்களின் சார்பாகவும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×