என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
உண்ணாவிரத போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 15 பேர் கைது
புதுச்சேரியில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பின்படி புதுவை அனைத்த தொழிற் சங்கம் சார்பில் கடலூர் சாலை தியாகிகள் சிலை முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. அபிஷேகம், சி.ஐ.டி.யூ. முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொழிற்சங்க தலைவர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, ஐ.என்.டி.யூ.சி. ஞானசேகரன், முத்துராமன், சி.ஐ.டி.யூ. சீனுவாசன், பிரபுராஜ், என்.ஆர்.டி.யூ.சி. மோகன் தாஸ், ஞானப்பிரகாசம், அண்ணாதொழிற்சங்கம் பாப்புசாமி, பழனிவேல், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மோதிலால், புருஷோத்தமன், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. சிவக்குமார், சங்கரன், எல்.எல்.எப். செந்தில், கதிர்வேல், பாட்டாளி தொழிற்சங்கம் சிவப்பிரகாசம், தமிழ் செல்வன், எம்.எல்.எப். வேதாவேணுகோபால், மாசிலாமணி,
அரசு ஊழியர் சம்மேளனம் பிரேமதாசன், ராதாகிருஷ்ணன், தென்னிந்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு பூர்த்தி, சரளா உள்ளிட்ட தொழிற் சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும். நலவாரிய, அமைப்புசாரா, கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
வேலைநேரம் அதிகரிப்பு முயற்சியை கைவிட வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயர்வு ரத்து முடிவை கைவிட வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப இலவச போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
காலை 6 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
இருப்பினும் நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் உண்ணா விரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகள் 15 பேரை கைது செய்தனர். மேலும் போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட சாமியானா பந்தல், சேர்கள், பேனர்களையும் போலீசார் அகற்றினர்.
இருப்பினும் தொழிற்சங்க நிர்வாகிகளின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Next Story