என் மலர்
செய்திகள்

அரசு பஸ்சில் சமூக இடைவெளியுடன் பயணித்த ஊழியர்கள்
வேலூர் மாவட்ட அரசு ஊழியர்களின் வசதிக்காக 27 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வேலூர் மாவட்ட அரசு ஊழியர்களின் வசதிக்காக 27 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அரசு பஸ்சில் ஊழியர்கள் சமூக இடைவெளியுடன் பயணித்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்வதற்கு வசதியாக 27 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்திருந்தார். இந்த பஸ்கள் மாவட்டத்தின் முக்கிய வழித்தடங்களில் வழியாக செல்லும். இதில் பயணம் செய்ய அரசு ஊழியர்கள் தங்களின் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி முதல் வேலூர் பழைய பஸ் நிலையத்தில இருந்து பேரணாம்பட்டு, குடியாத்தம், கணியம்பாடி, ஒடுகத்தூர், பொன்னை, சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்சில் அரசு ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிரைவர், நடத்துனர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். பஸ்சில் ஏறும் முன்பாக அவர்களுக்கு கை கழுவம் திரவம் வழங்கப்பட்டது.
இதேபோன்று பேரணாம்பட்டு, குடியாத்தம், கணியம்பாடி, ஒடுகத்தூர், பொன்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வாலாஜாவில் இருந்து வேலூருக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் அனைத்தும் மாலை 6 மணிக்கு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டன.

Next Story