என் மலர்
செய்திகள்

உயிரிழப்பு
என்.எல்.சி. தொழிலாளி திடீர் உயிரிழப்பு
என்.எல்.சி. தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி 12-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 47). என்.எல்.சி. நிரந்தர தொழிலாளி. கடந்த 16-ந்தேதி இரவு வீட்டில் இருந்த இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது. இதில் திடீரென மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், ஈஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story