search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடை
    X
    டாஸ்மாக் கடை

    கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறப்பு நேரம் நீட்டிப்பு

    கடலூர் மாவட்டத்தில் காலை 10 மணியில் இருந்து 7 மணிவரை கடை திறப்பு நேர நீட்டிப்பால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 143 மதுபான கடைகள் உள்ளன. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 10 இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து 2 நாட்களில் கடலூர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் திரண்டனர். அவர்களை கட்டுபடுத்தும் விதமாக நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் வழங்கப்பட்டன.

    நேரம் வாரியாக கொடுக்கப்பட்ட டோக்கன்களை வைத்து எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக, சமூக இடைவெளி விட்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த தகவலை அறிந்த டாஸ்மாக் அதிகாரி ஒருவர் மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் தற்போது கடை திறக்கும் நேரம் காலை 10 மணி முதல் 5 மணிவரை இருந்தது.

    டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைவாக இருந்ததால் காலை 10 மணியில் இருந்து 7 மணிவரை கடை திறந்து இருக்கும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேர நீட்டிப்பால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×