என் மலர்
செய்திகள்

தாக்குதல்
வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு அருகே வியாபாரியை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு குமலன்குட்டை குமணன் நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 39). பழ வியாபாரி. இவரது வீட்டின் எதிரே குடியிருப்பவர் பாவாயி (39). இவருக்கும், செந்திலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இரவு பாவாயி தன் உறவினர்களான பிரபாகரன் (25), நந்தகோபால் (22) ஆகியோருடன் சென்று செந்திலை தகாத வார்த்தைகளால் திட்டி உதைத்ததாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த செந்திலை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பவாயி, பிரபாகரன், நந்தகோபால் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
Next Story






