என் மலர்
செய்திகள்

பவானியில் குச்சி பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படாமல் இருப்பதை காணலாம்
பவானியில் ரூ.10 கோடி மதிப்பிலான குச்சி பைகள் உற்பத்தி பாதிப்பு
பவானியில் ரூ.10 கோடி மதிப்பிலான குச்சி பைகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
பவானி:
உலக அளவில் ஜமுக்காள உற்பத்திக்கு பெயர் பெற்ற பவானி நகரம் தற்போது ஜமுக்காள உற்பத்தியில் பெரும் சரிவை கண்டுள்ளது. கைத்தறி ஜமுக்காளத்தை உற்பத்தி செய்து வந்த தொழிலாளர்கள் பலர் கடந்த 2 ஆண்டுகளாக மாற்று தொழிலை நாடி சென்றுவிட்டனர். அதன் ஒருபகுதியாக ஜவுளி பைகள் உற்பத்தி செய்யும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், ஜவுளிக்கடைகளில் குச்சி பைகளின் பயன்பாடு அதிகரித்தது. இதனால் பவானியில் தற்போது உற்பத்தி செய்யும் பைகளுக்கு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜவுளி கடைகளுக்கு தேவையான குச்சி பைகள் அதிகமாக தயாரித்து கொடுக்கப்படுகின்றன. தினமும் சுமார் ரூ.7½ லட்சம் மதிப்பிலான பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பைகளை உற்பத்தி செய்ய 15 பெரிய நிறுவனங்களும், 500-க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 1,500 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இதன் துணை தொழில்களான பிரிண்டிங், குச்சி பை தைக்கும் தையல் தொழிலாளர்கள், பார்சல் நிறுவனங்கள் மூலமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த தொழில் மூலமாக அவர்களும் தினமும் ரூ.200 முதல் ரூ.300 வரை வருமானம் ஈட்டி வந்தனர்.
பவானியில் உற்பத்தியாகும் பைகள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள ஜவுளி கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் மக்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இதன் பாதிப்பு குச்சி பை தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டதால், கடந்த 1½ மாதங்களாக குச்சி பைகள் ஜவுளிக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், உற்பத்தி செய்யும் பணியும் நிறுத்தப்பட்டு உள்ளதால், உரிமையாளர்களில் இருந்து தொழிலாளர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து குச்சி பை தயாரிப்பு நிறுவன தொழில் அதிபர் எஸ்.கே.டி.செல்வம் கூறியதாவது:-
தமிழக அரசு அஸ்தர் பைகளை பயன்படுத்த தடை விதித்ததால் அஸ்தர் பைக்கு மாற்றாக காடா மற்றும் காட்டன் பைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். இந்த துணிகளுக்கான 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாக செலுத்தப்பட உள்ளது. இதை சமாளிக்க முடியாமல் நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம்.
இந்த சூழ்நிலையில் ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கு மேல் தொழில் முடக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த தொழிலை நம்பியுள்ள ஏராளமானோர் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த தொழிலை மேம்படுத்த தேவையான சலுகைகளை கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான பைகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்து உள்ளது. பவானியில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான குச்சி பைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story