search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோழி
    X
    கோழி

    கோழிக்கறி விலை ‘கிடுகிடு’ உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் கடந்த வாரம் ஒரு கிலோ கோழிக்கறி ரூ. 220-க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ.280 ஆக விலை உயர்ந்து விட்டது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாதத்தில் கோழிக்கறி விலை மளமளவென சரிந்து கிலோ ரூ. 80 வரை விற்பனையானது.

    அசைவ உணவு சாப்பிட்டால் நோய் தொற்று பரவி விடும் என கருதி பலர் சிக்கன், மட்டன் வாங்குவதை அப்போது தவிர்த்தனர். இதனால் கோழிக்கறி பண்ணையாளர்கள் பலர் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.

    அதன்பிறகு ஒரு மாதத்திலேயே கோழிக்கறி, ஆட்டு இறைச்சி விற்பனை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியது. அசைவ உணவு சாப்பிட்டால் தொற்று பரவாது என தெரிய வந்ததால் ஏராளமானோர் அசைவ உணவுகளை மீண்டும் வாங்கத் தொடங்கினர்.

    இதனால் சிக்கன், மட்டன் விலை மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ கோழிக்கறி ரூ. 220-க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ. 280-க்கு விலை உயர்ந்து விட்டது.

    ஆனால் முட்டை விலை சீராக உள்ளது. ஒரு முட்டை ரூ. 4-க்கு விற்கப்படுகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ ரூ. 900-க்கு விற்பனை ஆகிறது. சில இடங்களில் ரூ. 1000 வரை விற்கிறார்கள்.

    கோழிக்கறி விலை உயர்வு குறித்து பேபி புரோட்டின் கடை உரிமையாளர் அடையார் டி.துரை கூறியதாவது:-

    கொரோனா பரவிய காலத்தில் கோழிக்கழி வியாபாரம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது. கோழிக்கறி விற்பனை ஆகாததால் பலர் அவற்றை குப்பையில் கொட்டினர்.

    லட்சக்கணக்கான முட்டைகள் தேங்கியதால் அவற்றையும் குப்பையில் போட்டனர். இதனால் ஏராளமான கோழிப்பண்ணையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். ஒருசிலர் கோழிப்பண்ணைகளை மூடி விட்டனர்.

    தற்போது கோழி வியாபாரம் சூடு பிடித்துள்ளது. வழக்கத்தை விட அதிக வியாபாரம் நடைபெறுவதால் அதற்கேற்ப கோழி உற்பத்தி இல்லை. இதனால் தட்டுப்பாடு உள்ளது.

    அதன் காரணமாகவே கோழி விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ. 300 வரை விலை உயரும் என தெரிகிறது. ஒரு மாதம் இப்படித்தான் இருக்கும். அதன்பிறகு தான் விலை குறைய வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×