search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி
    X
    அரிசி

    சேலம் மாநகர் மாவட்ட பாமக மகளிர் அணி சார்பில் 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் மாநகர் மாவட்ட பாமக மகளிர் அணி சார்பில் 100 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், புளி ஆகிய மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன.
    சேலம்:

    கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சேலம் மாநகர் மாவட்ட பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பா.ம.க. சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. மகளிரணி சார்பில் சேலம் 4-ரோடு அருகே உள்ள 27-வது வார்டு முள்ளக்காடு பகுதியில் 100 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு ,சமையல் எண்ணெய், புளி ஆகிய மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன.

    அதனை மாவட்ட பா.ம.க. இளம்பெண்கள் செயலாளர் கவுசல்யா வழங்கினார். இதில் மாநில மகளிர் அணி செயலாளர் கலா, 27-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வி மற்றும் கவிதா, பிரவீனா, சூரியகலா, ஜெசி, பூபதி, ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×