என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு

    ஈரோடு அருகே பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு திருநகர் காலனி அருகே உள்ள ஜெயகோபால் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த கடை தமிழக அரசின் உத்தரவின் பேரில் கடந்த 7,8-ந் தேதிகளில் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி 8-ந் தேதி மாலை கடை மூடப்பட்டது.

    அப்போது டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் வேலுச்சாமி, விற்பனையாளர் முருசேகசன்ஆகியோர் கடை மூடுவதற்கு முன் மது பாட்டில்களை கணக்கு காண்பிக்காமல் எடுத்து அருகில் உள்ள பெட்டிக்கடையில் பதுக்கி வைத்தனர்.

    பின்னர் இருவரும் பெட்டிக்கடை உரிமையாளரான கருங்கல் பாளையத்தை சேர்ந்த கணேசனிடம் மதுபானங்களை கொடுத்து அதிக விலைக்கு விற்க சொல்லி அதில் வரும் பணத்தை 3 பேரும் பிரித்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இளங்கோவிற்கு தகவல் தெரிவித்தனர். டாஸ்மாக் மேலாளர் கடைக்கு சென்று விற்பனை விவரங்களை சரிபார்த்தார். அப்போது கடையில் இருப்பு இருந்த ரூ. 56 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கணக்கில் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்த போது டாஸ்மாக் மேற்பார்வையாளர் வேலுச்சாமி, விற்பனையாளர் முருகேசன் ஆகியோர் மதுபானங்களை எடுத்து அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு கொண்டு சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பெட்டிக்கடை உரிமையாளர் கணேசனும் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் வேலுச்சாமி, விற்பனையாளர் முருகேசன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×