என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்- நாராயணசாமி

    கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 110 மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. இந்தியாவில் கடந்த காலத்தை ஒப்பிடும் போது கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மக்கள் ஒத்துழைப்பின்றி அரசால் எதுவும் செய்ய முடியாது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியவரின் வீடு இருக்கும் இடத்தை தவிர மற்ற இடங்கள் தனிமைப்படுத்தும் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறி யாருக்கும் தெரிவதில்லை, எப்படி வருகிறது, போகிறது என தெரியாது. கொரோனா பரவலில் நாம் 2-ம் கட்டத்தில் உள்ளோம். 3-ம் நிலைக்கு சென்றால் சமூக பரவலாக மாறிவிடும். அப்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    மக்கள் ஓரளவு சமூக இடைவெளி கடைபிடித்தாலும், மாலை நேரத்தில் சிலர் தேவையின்றி வெளியே சுற்றுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். ஜூன், ஜூலை மாதத்தில் தாக்கம் அதிகமாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

    இதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இங்குள்ள வெளிமாநிலத்தினரை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ரெயில் விட மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், படுக்கைகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். டாக்டர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×