என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதானவர்களை படத்தில் கணலாம்.
    X
    கைதானவர்களை படத்தில் கணலாம்.

    சீர்காழியில் பறவைகளை வேட்டையாடிய 4 பேர் கைது

    சீர்காழியில் பறவைகளை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கார் பறிமுதல் செய்யப்பட்டன.
    சீர்காழி:

    சீர்காழி புறவழிச்சாலையையொட்டி உள்ள வனபகுதியில் சிலர் தொடர்ந்து பறவைகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனக்காவலர்கள் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அங்கு பறவைகளை வேட்டையாடிய 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.

    அதில் அவர்கள் சீர்காழி பிடாரி தெற்கு வீதியை சேர்ந்த ஜார்ஜ் பிரபாகரன் (வயது 53), திருத்தலமுடையார் கோவில் தெருவை சேர்ந்த தென்னரசு மகன் வெற்றிச்செல்வம் (28), ஜெகநாதபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹரிஹரன் (23), தென்பாதியை சேர்ந்த ரமேஷ் (40) என்பதும், அவர்கள் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்து பறவைகளை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள், சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வனத்துறையினர், அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், கார், வேட்டையாடிய பறவைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×