என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சீர்காழி அருகே முருகன் கோவில் அர்ச்சகர் மர்ம மரணம்

    சீர்காழி அருகே 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போன முருகன் கோவில் அர்ச்சகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் குமார சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் அர்ச்சகராக நடராஜ் (50).இவர் கோவில் வாசலில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழ் பழனி என்றழைக்கப்படும் இந்த கோவிலின் கர்ப்ப கிரகத்தில் இருந்த ஐம்பொன்னாலான குமார சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளின் விக்ரகங்கள் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டது.

    இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் பூஜைகளை தொடர்ந்து செய்து வந்த நடராஜன் 5 கி.மீ தொலைவில் குன்னம் கிராம சிவன் கோவிலிலும் பூஜை செய்து வந்தார். 

    இந்நிலையில் நடராஜன் குன்னம் கோவிலில் பூஜை செய்ய சென்றார். நேரம் கடந்தும் அவர் வராததால் அவரை தேடியபோது கீழமாத்தூர் கிராமத்தில் வீரன் கோவில் பின்புறம் நடராஜன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

    இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×