search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐம்பொன் சிலைகள் கொள்ளை"

    • வையப்பமலை அருகே உள்ள சித்த மூப்பன்பாளையத்தில் ஓங்காளியம்மன் கோவில் உள்ளது.
    • அங்கிருந்த 2 அடி உயர ஐம்பொன் சிலை மற்றும் பூஜை பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்து.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை அருகே உள்ள சித்த மூப்பன்பாளையத்தில் ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சார்ந்த வடிவேல்( வயது 32) என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜைகள் முடித்து மாலை 6 மணி அளவில் கோவில் நடையை சாத்தி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    பூட்டு உடைப்பு

    தினமும் காலை 6 மணிக்கு கோவிலுக்கு செல்லும் பூசாரி வடிவேல், மழையின் காரணமாக நேற்று சற்று தாமதமாக சென்றார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 அடி உயர ஐம்பொன் சிலை மற்றும் பூஜை பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்து. இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா பெரியசாமிக்கு தகவல் தெரிவித்தார். இதை அடுத்து தர்மகர்த்தா, எலச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

    40 கிலோ ஐம்பொன் சிலை

    அதன் பேரில் நாமக்கல் ஏ.டி.எஸ்.பி சந்திரமௌலி, திருச்செங்கோடு டி.எஸ்.பி மகாலட்சுமி, எலச்சிப்பா ளையம் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், 40 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை, விநாயகர் சிலை, 15 கிலோ எடை கொண்ட வெண்கல மணிகள், 8 குத்து விளக்குகள் மற்றும் பூஜை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சி.சி.டி.வி. கேமரா

    நாமக்கல்லில் இருந்து தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை சேகரிக்கப்பட்டது. மேலும் போலீஸ் மோப்பநாய் வர வழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதி வாகியுள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×