search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள் கொரோனா பரிசோதனைக்கு முன்வர வேண்டும்- சுகாதாரத்துறை

    கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள் கொரோனா பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என்று புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் இருப்பவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. அருகில் உள்ள கடலூரில் நேற்று காலை வரை 161 பேருக்கும், விழுப்புரத்தில் 135 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு வருவோர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    முத்தியால்பேட்டை மற்றும் திருக்கனூர் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மூலக்குளம், அரியாங்குப்பம், திருவண்டார்கோவில் பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக தொடர்கிறது. புதுவையில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் செல்வதற்கு முன் பரிசோதிக்க வேண்டும். இதற்காக கலெக்டர் அலுவலத்தில் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு வெளிமாநிலம் செல்லும் தொழிலாளர்கள் பரிசோதனை செய்யப்படுவர்.

    கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். விடுபட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×