என் மலர்
செய்திகள்

அதிமுக
வேலூர் வள்ளலாரில் அ.தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
வேலூர் வள்ளலார் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேலூர்:
வேலூர் வள்ளலார் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு வேலூர் தொகுதி செயலாளர் சி.கே.சிவாஜி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கபட்டது.
நிகழ்ச்சியில் 2-வது மண்டல சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், மேற்பார்வையாளர் கோவிந்தராஜ், வட்ட செயலாளர் சி.கே.எஸ்.வினோத்குமார், முன்னாள் அவைத்தலைவர் ஜானகிராமன் பகுதி செயலாளர் ஜி.எஸ்.ஏ. ஆறுமுகம், இணை செயலாளர் சம்பத், பேச்சாளர் இடிமுரசு ரவி, வட்ட செயலாளர் ஆர்.கே.ரமேஷ், கட்சி நிர்வாகிகள் மகேஷ், சேகர், டைலர் குமார், சுதர்சன், காலேசு பாஷா, புருஷோத்தமன், ரமேஷ், அய்யனார், வெங்கடேசன், லட்சுமணன், வி.எஸ்.ரமேஷ், மகேஷ்குமார், அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






