search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மார்க்கெட்டில் காய்கறி வாங்க குவிந்த பொதுமக்கள்.
    X
    கோவை மார்க்கெட்டில் காய்கறி வாங்க குவிந்த பொதுமக்கள்.

    கோவையில் காய்கறி மார்க்கெட், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம்

    கோவையில் 4 நாள் முழு ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில் இன்று காய்கறி மார்க்கெட், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கோவை:

    சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த 26-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கோவையில் அனைத்து கடைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டு சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த முழு ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு நிறைவு பெற்றது.

    இதனையடுத்து இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகள் மற்றும் காய்கறி மார்க்கெட் திறக்க அரசு அனுமதி அளித்தது.

    இந்த உத்தரவை அடுத்து கோவையில் இன்று காலை முதல் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

    இதேபோல மளிகை கடைகள், கறிக்கடைகள் ஆகியவற்றில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திடீரென அரசு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளதால் வரும் காலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்ற அச்சத்தில் காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

    Next Story
    ×