என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி
    X
    அரிசி

    வல்லத்திராகோட்டை ஊராட்சி சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்

    வல்லத்திராகோட்டை ஊராட்சி மன்றத்தின் சார்பில் அரிசி, பருப்பு, பாமாயில், 12 வகையான காய்கறிகள் கொரோனா வைரசால் வீட்டில் முடங்கியுள்ளவர்களுக்கு உணவு பொருட்களை ஊராட்சி மன்ற வளாகத்தில் வழங்கப்பட்டது.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள வல்லத்திராகோட்டை ஊராட்சி மன்றத்தின் சார்பில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, பாமாயில், 12 வகையான காய்கறிகள் கொரோனா வைரசால் வீட்டில் முடங்கியுள்ளவர்களுக்கு உணவு பொருட்களை ஊராட்சி மன்ற வளாகத்தில் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்ப்பட்ட வல்லத்திராக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் கன்சல் பேகம் தலைமை தாங்கினார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படியும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படியும், அ.தி.மு.க. வர்த்தக அணி மாநில துணைச்செயலாளர் புதுக்கோட்டை ஜாபர்அலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 450 குடும்பத்தினர்களுக்கு வீடு, வீடாகச் சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வல்லத்திராக் கோட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆறுமுகம், வல்லாத்திராகோட்டை காவல் துறை உதவி ஆய்வாளர் பால சுப்பிரமணியன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கணேசன், அப்பகுதி பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டனர்.
    Next Story
    ×