என் மலர்
செய்திகள்

பசு மாடு
இரும்பு கம்பியால் பசு மாட்டின் காலை உடைத்த விவசாயி
வில்லியனூர் அருகே வைக்கோல் போரை தின்று சேதப்படுத்திய ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் பசு மாட்டின் காலை உடைத்த விவசாயியை போலீசார் தேடி வருகிறார்கள்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கலிய பெருமாள் (வயது 32) பெயிண்டர். இவர் சொந்தமாக பசு மாடு வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று கலிய பெருமாளின் பசு மாடு காணாமல் போனது. எங்கு தேடியும் காணவில்லை. மறுநாள் காலை பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த விவசாயி கலியன் என்பவரது வைக்கோல் போர் அருகே கால்கள் உடைந்த நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட பசு மாடு கிடந்தை கண்டு கலியபெருமாள் அதிர்ச்சி அடைந்தார். கலியனுடைய வைக்கோல் போரில் கலியபெருமாளின் பசு மாடு வைக்கோலை தின்று சேதப்படுத்தியதால் ஆத்திரத்தில் கலியன் இரும்பு கம்பியால் பசு மாட்டின் இடது காலை உடைத்தது தெரியவந்தது.
இதையடுத்து பசு மாட்டை ஒரு மினி வேன் மூலம் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பசு மாட்டுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மாட்டின் காலை சரி செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து கலிய பெருமாள் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கலியனை தேடி வருகிறார்கள்.

Next Story