search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    அறந்தாங்கி நகர் பகுதியில் குப்பை வாகனத்தில் காய்கறி விற்பனை?- தவறான தகவல் என ஆணையர் விளக்கம்

    அறந்தாங்கி நகராட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சமூக வலை தளங்களில் சிலர் குப்பை அள்ளும் வாகனத்தில் காய்கறி விற்பனை செய்வதாக தவறான தகவல் பரப்பி வருகின்றனர் என்று ஆணையர் கூறியுள்ளார்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி நகராட்சியில் குப்பை சேகரிக்க 4 லாரிகள் மற்றும் பேட்டரியில் இயங்கும் 10-க்கும் மேற்பட்ட வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு பொது மக்களுக்கு நேரடியாக காய்கறிகள் கிடைக்கும் விதமாக நடமாடும் காய்கறி வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். நகராட்சிக்கு சொந்தமான வாகனம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு பின்னர் எப்.சி. எடுத்து அம்மா உணவகத்திற்கு உண்டான பொருட்களை ஏற்றுவதற்கு பயன்படுத்தி வரப்பட்டது.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் குப்பை வண்டியில் காய்கறிகள் விற்பதாக தவறான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகணேஷ் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. நடமாடும் காய்கறி விற்பனைக்கு நகராட்சி வாகனம் பயன்படுத்தப்பட்டது. அது அம்மா உணவகத்திற்கு பொருட்கள் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டது. அறந்தாங்கி நகராட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சமூக வலை தளங்களில் சிலர் குப்பை அள்ளும் வாகனத்தில் காய்கறி விற்பனை செய்வதாக தவறான தகவல் பரப்பி வருகின்றனர். இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றார்.

    Next Story
    ×