search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் நிலோபர்கபில்
    X
    அமைச்சர் நிலோபர்கபில்

    ரம்ஜான் நோன்பு- வீட்டில் இருந்து தொழுகை நடத்த அமைச்சர் நிலோபர்கபில் வேண்டுகோள்

    ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்க உள்ளதால் வீட்டிலேயே இருந்து தொழுகை நடத்த வேண்டும் என்று அமைச்சர் நிலோபர்கபில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வாணியம்பாடி:

    அமைச்சர் நிலோபர் கபில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தொற்று நோய் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் வந்துள்ளது.

    இந்த நிலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

    மற்ற மாநிலங்களில் உள்ளது போல் நாமும் பள்ளிவாசல்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே தொழுது வருகின்றோம்.

    எனவே நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பிறை தென்பட்டால் ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்க உள்ளது. இதில் ஏற்கனவே நாம் பின்பற்றிவரும் நடைமுறையை இப்போதும் பின்பற்றி நோன்பு சகஹர், இப்தார் வீட்டிலேயே இருந்து செய்து தாராவீஹ் வீட்டிலேயே தொழுது இந்த நோயிலிருந்து அனைவரும் மீண்டு வர இறைவனை கையேந்தி துவா செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    2020-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நோன்பு காலத்தில் அளிக்கப்படும் ரம்ஜான் அரிசி உள்ளிட்ட அனைத்தையும் பள்ளிவாசல்களுக்கு வழங்க, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்து, சிறுபான்மை மக்களுக்கு வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

    இவற்றை அளிக்கும் போது ஒரே இடத்தில் கூட்டம் கூட கூடாது என்பதற்காகவும், பள்ளி வாசல்களில் எக்காரணத்தை கொண்டும் நோன்பு கஞ்சி காய்ச்ச கூடாது என்பதற்காக, அதனை ஏழை, எளிய மக்களுக்கு பிரித்து அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் இப்தார் விருந்து அளித்து வந்தது. தற்போது இந்த ஆண்டு அதனை நடத்த முடியாத ஒரு சூழ்நிலையையும் ஏற்பட்டு இருப்பதால், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் இருந்து தொழுகைகளை வீட்டிலேயே நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×