என் மலர்

  செய்திகள்

  வீடு புகுந்து கொள்ளை
  X
  வீடு புகுந்து கொள்ளை

  குடியாத்தம் அருகே அரசு கல்லூரி ஊழியர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடியாத்தம் அருகே கல்லூரி ஊழியர் வீட்டில் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  குடியாத்தம்:

  ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ஜெயபிரகாஷ். இவரது மனைவி கீதாம்பிகை. இவர்கள் தற்போது குடியாத்தம் ராஜா கோவில் முத்து நகர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

  ஜெயபிரகாஷ் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் பிரிவில் பயிற்றுநராக பணியாற்றி வருகிறார்.

  தற்போது ஊரடங்கு உத்தரவால் ஜெயப்பிரகாஷ் தனது மனைவியுடன் சொந்த ஊரான விளாப்பாக்கம் கிராமத்திற்கு கடந்த மாதம் 24-ந்தேதி சென்றுவிட்டார்.

  மர்ம நபர்கள் வீட்டில் பூட்டை உடைத்து பிரோ இருந்த 55 பவுன் தங்க நகைகளும், வெள்ளி பொருட்களும், ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டனர்.

  இந்நிலையில் இன்று ஜெயபிரகாஷ் தனது மனைவியுடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

  இதனையடுத்து ஜெயபிரகாஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

  சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் திருட்டு நடைபெற்ற வீட்டில் ரேகைகளை பதிவு செய்தனர்.

  கல்லூரி ஊழியர் வீட்டில் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×