என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1629 ஆக உயர்வு

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக இருந்தது. 

    இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது.

    இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 33 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×