என் மலர்
செய்திகள்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உலா வந்த காட்டு யானைகளை காணலாம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் சுதந்திரமாக உலா வரும் காட்டுயானைகள்
ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து குறைந்ததால் மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் காட்டு யானைகள் சுதந்திரமாக உலா வந்தன.
மேட்டுப்பாளையம்:
கோவை வனக்கோட்டத்துக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் காட்டு யானைகள், காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் மற்றும் மான்கள் அடிக்கடி வனத்தைவிட்டு வெளியேறி கிராமப்பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால், சமவெளி பகுதியான கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அங்கு வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி 9 காட்டு யானைகள் நீலகிரி மாவட்ட வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து உள்ளன.
குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கே.என்.ஆர். பகுதியில் 5 யானைகளும், வருகன் தோட்டம் பகுதியில் 4 யானைகளும் முகாமிட்டு இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் வாகன போக்குவரத்து குறைந்து உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஒரு சிலர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து குறைந்ததின் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக கடந்து செல்கிறது. சம்பவத்தன்று மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் 2 யானைகள் ஒய்யாரமாக உலா வந்ததோடு, சாலையில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. பின்னர் சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இதேபோல மேட்டுப்பளையம்-குன்னூர் சாலையில் உள்ள பர்லியார், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் குட்டியுடன் சுதந்திரமாக உலா வருகின்றன. சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் காட்டு யானைகள் நீண்ட நேரம் சாலையில் அங்கும் இங்குமாக உலா வந்தன.
வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், அவசர தேவைகளுக்காக வாகனங்களில் செல்பவர்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Next Story