என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றுபவர்களை தடுக்க தஞ்சையில் முக்கிய சாலைகள் பேரிகார்டு வைத்து அடைப்பு
பல்வேறு சாலைகள் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டதால் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் கட்டுப்படுத்தப்பட்டார்கள். இதற்கிடையே அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் மாற்று பாதையில் சென்றன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தஞ்சை நகரில் சாலைகளில் நடமாடும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. மேலும் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருந்தது. இதில் பல பேர் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி திரிவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சாலைகளில் வாகன போக்குவரத்தை குறைக்கும் வகையில் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்து 1 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்கும் கடைகளில் தான் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும், அதுவும் நடந்து சென்று தான் பொருட்கள் வாங்க வேண்டும். வாகனங்களில் சென்றால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த அமல் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து போலீசார் நகரில் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி சிலர் தாங்கள் வசிக்கும் இடத்தை விட்டு நீண்ட தூரத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்று வந்தனர். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் சாலைகளில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களை தடுக்கும் வகையில் அண்ணா சிலை, நாஞ்சிக்கோட்டை சாலை, ராமநாதன் ரவுண்டானா, கோடியம்மன் கோவில் சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் சுற்றி பேரிகார்டு நேற்று இரவு வைக்கப்பட்டது. இந்த சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பேரிகார்டு வைத்து அடைக்கப்பட்டது. அங்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை அந்த பகுதிகளில் வந்த வாகனங்களை வழிமறித்து நிறுத்திய போலீசார், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமானால், நீங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்கும் கடைகளுக்கு செல்லுங்கள். உங்களின் வசதிக்காக தான் அனைத்து இடங்களிலும் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. லாரிகளிலும் அனைத்து வீதிகளிலும் காய்கறி விற்பனை நடந்து வருகிறது என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.
பல்வேறு சாலைகள் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டதால் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் கட்டுப்படுத்தப்பட்டார்கள். இதற்கிடையே அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் மாற்று பாதையில் சென்றன. அதுவும் உரிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சாலைகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க நீண்ட தூரத்துக்கு செல்வது தடுக்கப்பட்டது.

Next Story