என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஆட்டோ ஓட்டிய போலீஸ்காரர்
புதுச்சேரி அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க ஆட்டோ ஓட்டிய போலீஸ்காரருக்கு பாராட்டு குவிந்து வருகிறது,
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டையில் போலீஸ்காரர்கள் கருணாகரன் (ஆயுதப்படை) அருண்ஜோதி என்பவர் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தபகுதி பெருமாள் நாயுடு வீதியை சேர்ந்த மேகலா யுவராணிக்கு(வயது26) நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையறிந்த உறவினர்கள் அங்கிருந்த போலீசாரிடம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துசெல்ல உதவவேண்டும் என தெரிவித்தனர்.
ஊரடங்காலும், நள்ளிரவு நேரம் என்பதாலும் வாகனங்கள் ஏதும் இல்லை.உடனே அந்த பகுதியில் நிறுத்தியிருந்த ஆட்டோவின் உரிமையாளரிடம் சாவியை வாங்கிய போலீஸ்காரர் கருணாகரன் தானே ஓரு ஆட்டோ டிரைவராக மாறி பிரசவ வலியால் துடித்த அந்த கர்பிணியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மற்றும் மகளிர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.அங்கு அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.
இதனையறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் கடமை உணர்வுடன் செயல்பட்டு தாய் மற்றும் சேய் உயிரை காப்பாற்றிய பேலீஸ்காரர்கள் கருணாகரன் மற்றும் அருள்ஜோதி ஆகியோரை பாராட்டி வாழ்த்து சான்றிதழ் வழங்கினார்.

Next Story