என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வில்லியனூர் அருகே மது கிடைக்காத வேதனையில் தொழிலாளி தற்கொலை

    வில்லியனூர் அருகே ஊரடங்கு உத்தரவால் சாராயக்கடைகள் உள்பட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது அருந்த முடியாத வேதனையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது62). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அடிக்கடி கால்வழி ஏற்படும். அதற்காக வலியை மறக்க அரிகிருஷ்ணன் சாராயம் குடிப்பது வழக்கம்.

    இதற்கிடையே கொரோனா ரைவஸ் பரவுதல் தடுப்பதற்காக கடந்த சில நாட்களாக புதுவையில் சாராயக்கடைகள் உள்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு விட்டன.

    இந்நிலையில் அரிகிருஷ்ணன் கால்வலியை பொறுத்துக்கொள்ள சாராயம் குடிக்க பல இடங்களில் கேட்டுப்பார்த்தார். ஆனால் எங்கும் சாராயம் விற்கப்படாததால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் அவர் வழியாலும் துடித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கால்வலி அதிகமானதால் மனவேதனை அடைந்த அரிகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு அவர் வீட்டில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது மனைவி சரோஜா கொடுத்த புகாரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×