என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னர் கிரண்பேடி
    X
    புதுவை கவர்னர் கிரண்பேடி

    வீட்டிலேயே முககவசம் தயாரிப்பது எப்படி?- கவர்னர் கிரண்பேடி வீடியோ வெளியீடு

    கவர்னர் கிரண்பேடி வீட்டிலேயே சுலபமாக முககவசம் தயாரிப்பது எப்படி? என்பது தொடர்பாக செய்முறை விளக்கம் அளித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் புதுவையில் சுய உதவி குழுக்கள் முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி வீட்டிலேயே சுலபமாக முககவசம் தயாரிப்பது எப்படி? என்பது தொடர்பாக செய்முறை விளக்கம் அளித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

    இதன்படி மக்கள் முக கவசம் தயாரித்து அணிந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் கவர்னர் கிரண்பேடி பதிவிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
    Next Story
    ×