search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கேரளாவில் இருந்து தாளவாடி வந்த 30 பேருக்கு மருத்துவ பரிசோதனை

    கேரளாவில் இருந்து தாளவாடி வந்த 30 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அவர்கள் அனைவரும் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    தாளவாடி:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதுடன், தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திகினாரை மற்றும் பனகள்ளி ஆகிய கிராமங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் 30 பேரும் நேற்று தாளவாடி வந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் தாளவாடி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சிவா தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர்.

    அவர்கள் அனைவரும் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதே போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தாளவாடி திரும்பிய 2 வாலிபர்களையும், இத்தாலியில் இருந்து திரும்பி வந்த பெண்ணையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும் போது, வெளிமாநிலங்களில் இருந்து தாளவாடி பகுதிக்கு திரும்பியவர்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மேலும் அவர்கள் தங்கள் விவரங்களை வருவாய் துறை மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×