search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்கள்
    X
    மீன்கள்

    கொரோனா வைரஸ் எதிரொலி- ஈரோட்டில் மீன் விலை உயர்வு

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரோடு மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. மேலும் மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வஞ்சரம், ஊழி,பாறை, சங்கரா, கொடுவாய், அயிரை, மத்தி, நெத்திலி, சூறை, கருப்பு வாவல், இறால், நண்டு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வருகிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரோடு மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ வஞ்சரம் மீன் ரூ. 700-க்கு விற்பனையானது. தற்போது கிலோவுக்கு ரூ. 100 வரை அதிகரித்து உள்ளது. ஊழி மீன் ஒரு கிலோ ரூ. 450-க்கு விற்பனையானது. தற்போது ரூ. 50 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ. 450-க்கு விற்ற பாறை மீன் தற்போது 500-க்கு விற்கப்படுகிறது. இறால் ஒரு கிலோ ரூ. 500-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ நண்டு முன்பு 300-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ. 500-க்கு விற்பனையாகிறது.

    ஆற்று மீன்களான ரோகு, கெண்டை மீன்கள் ரூ. 150-ல் இருந்து 180-க்கு விற்பனையாகிறது.

    Next Story
    ×