என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுச்சேரி மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு- மாகே மருத்துவமனையில் அனுமதி

    புதுச்சேரியின் மாகே பகுதியைச் சேர்ந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு 7 ஆயிரத்து 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

    இந்நிலையில், புதுசேரி மாநிலம் மாகேவைச் சேர்ந்த ஒரு மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    அவர் அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து மாகே வந்துள்ளார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மாகேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரது ரத்த மாதிரி, பரிசோதனைக்காக கோழிக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரத்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மூதாட்டி மாகே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார். 

    இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×