என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பாகூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

    பாகூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி இறந்து போனார்.

    பாகூர்:

    பாகூர் அருகே மேல் பரிக்கல்பட்டு வன்னியர் தெருவை சேர்ந்தவர் சின்னையன் (வயது 55). விவசாய கூலித்தொழிலாளி. இவர், நேற்று மாலை ஆராய்ச்சி குப்பம்- பரிக்கல்பட்டு மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சின்னையன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில், தூக்கி வீசப்பட்ட சின்னையன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சின்னையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் ஜெயசங்கர் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×