என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அரியாங்குப்பத்தில் விபசார தொழில் நடத்திய பெண் உட்பட 3 பேர் கைது

    அரியாங்குப்பத்தில் விபசார தொழில் நடத்திய பெண் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கப்சியல் வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் மஞ்சுளா (வயது 40) என்ற பெண் விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    மேலும் அங்கு மரக்காணத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களான வினோத்குமார்(30), ஜெகன் (30) ஆகியோர் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×