என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை புதிய பஸ் நிலையம்
    X
    புதுவை புதிய பஸ் நிலையம்

    புதிய பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல்- பொதுமக்கள் புகார்

    புதுவை புதிய பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தடுக்க கோரி கவர்னர் கிரண்பேடிக்கு பொதுமக்கள் புகார் அனுப்பி உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையத்தில் உள்ள புதுவை நகராட்சிக்கு சொந்தமாக வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு வெளியூர்களுக்கு செல்வோர் மற்றும் வெளியூர்களில் வேலைக்கு செல்வோர் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வர். தினமும் இங்கு குறைந்தது 1500 வாகனங்கள் முதல் 2 ஆயிரம் வாகனங்கள் வரை நிறுத்தப்படுகின்றன.

    இங்கு சைக்கிள் மற்றும் இருசக்கர வாகங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் உரிமையானது 1.7.2019 முதல் 31.3.2020 வரை கடந்த ஆண்டு 20.6.2019 புதுவை நகராட்சியின் ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விடப்பட்டது. அதன்படி புதுவை நகராட்சியானது சைக்கிள் நாள் ஒன்றுக்கு ரூ.5 எனவும், இரு சக்கர வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.8 எனவும் நிர்ணயம் செய்துள்ளது.

    ஆனால், ஏலம் எடுத்த நபர், நகராட்சியின் நிர்ணய கட்டணத்தை காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதுபற்றி நகராட்சிக்கு பலமுறை தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி பொதுமக்கள் கவர்னர் கிரண்பேடிக்கு புகார் அனுப்பி உள்ளனர்.
    Next Story
    ×