என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ஜெயகாந்தன்
    X
    கலெக்டர் ஜெயகாந்தன்

    பெண்கள் தொடர்ந்து சாதனை படைக்கவே மகளிர் தினவிழா- சிவகங்கை கலெக்டர் பேச்சு

    உலக மகளிர் தின விழாவில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதால் வெற்றி அவர்கள் பக்கம் உள்ளது என கலெக்டர் ஜெயகாந்தன் புகழாரம் சூட்டினார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் உலக மகளிர் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் குழுக் களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    பெண்களின் சம உரிமை என்ற நிலை மாறி இன்றைக்கு ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு அதிகளவு உள்ளது. குறிப்பாக பணிபுரியும் ஒவ்வொரு அலுவலகத்திலும் சரி, பள்ளிக் கல்லூரிகளிலும் சரி பெண்களே அதிகமாக பங்கேற்றுள்ளனர்.

    அதற்கு காரணம் தன்னம்பிக்கை மற்றும் முன்னேற்றம். இவை இரண்டும் சரியான முறையில் கையாளப்பட்டு வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.

    கிராமப்பெண்கள் முன்னேற்றம் பெற அரசு பல்வேறு நலத்திட்டங் களை வழங்கி வருகிறது. அதை உணர்ந்து கிராம பகுதியிலுள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவை பயன்படுத்தி பொருளாதாரம் பெற்றிட வழிவகுத்திட வேண்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தின விழாவை கொண்டாடுவதன் நோக்கம் பெண்கள் முன்னேற்றத்தில் சிறந்து விளங்கிடவும் சாதனை படைத்திட வேண்டும் என்பதே ஆகும். அதை நிலை நிருத்தும் விதமாக பெண்கள் அரசின் திட்டங்களை பெற்று பயனடைந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் பழனீஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சிந்து, மாவட்ட சமூக நல அலுவலர் வசந்தா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மேரிதபித்தாள் (சட்டம்), சாந்தி (ஊரக வளர்ச்சித் துறை) மற்றும் அரசு அலு வலர்கள், தொண்டு நிறுவன அமைப்புகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×