என் மலர்
செய்திகள்

மறைந்த அன்பழகன் படத்திற்கு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவையொட்டி கட்சியினர் அமைதி ஊர்வலம்
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவையொட்டி ஜெயங்கொண்டத்தில் அமைதி ஊர்வலம் நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர கழகத்தின் சார்பில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவையொட்டி ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இருந்து அமைதி ஊர்வலம் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அமைதி ஊர்வலம் அண்ணா சிலையில் நிறைவு பெற்றது. அங்கு வைக்கப்பட் டிருந்த அன்பழகனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன், ஒன்றிய பொறுப்பாளர் இரா. மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி. பாலசுப்பிரமணியம், தலைமைக்கழக பேச்சாளர் குமார், மாவட்ட பிரதிநிதிகள் ராஜமாணிக்கம் பிள்ளை, பஞ்சநாதன், தா.திருஞானம், கணேசன்,மாவட்ட அணிகளின்துணை அமைப்பாளர்கள் பஞ்சநாதன், மூசா, கிருஷ்ணா, நகர அவைத்தலைவர் எஸ்.குமார், ஆசிரியர் தன. கண்ணதாசன், நகர நிர்வாகிகள் காசிநாதன், ரமேஷ், கொளஞ்சியப்பா, நிர்மலா செல்வம், ரவிச்சந்திரன், புனிதம், ஞானபிரகாசம், ராமசாமி, ராசப்பன், நடராஜன், அகிலன், கரிகாலன், ஸ்ரீராம், பிரபு, கொளஞ்சிநாதன், பக்கிரி, டைலர் அன்பு, சிவா, பெரியசாமி, சரவணன் மற்றும் நிர்வாகிகள் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
Next Story






