என் மலர்
செய்திகள்

கைப்பந்து போட்டியில் மோதல்
ஊத்துக்கோட்டை அருகே கைப்பந்து போட்டியில் மோதல்- 3 பேர் படுகாயம்
ஊத்துக்கோட்டை அருகே கைப்பந்து போட்டியில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள அண்ணவரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மைதானத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அண்ணவரம் கிராம அணி, செங்கரை கிராம அணிகள் மோதின.
அப்போது இரு அணிகள் எடுத்த புள்ளிகள் குறித்து வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கோஷ்டி மோதலாக மாறியது.
அண்ணவரத்தை சேர்ந்த தீபன், சரவணன் ஆகியோர் உருட்டுகட்டைகளால் தாக்கியதில் செங்கரையை சேர்ந்த நவீன் (21), அருண் (19), அஜய் (20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தீபன், சரவணன் ஆகியோர் மீது ஊத்துக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்.
Next Story