என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  ஆலங்குடி அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆலங்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிளஸ்-2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  ஆலங்குடி:

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கூளையான் விடுதி அருகில் உள்ள மணவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் குமரப்பன் மகள் ஜெயலட்சுமி (வயது 17). இவர் பெருங்கலூரில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

  இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வயிற்று வலி தாங்க முடியாததால் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உத்திரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஜெயலட்சுமியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். 

  இது தொடர்பாக சம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×