search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    குறைந்து வரும் பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

    பெட்ரோல் விலை குறைந்து வருவது மகிழ்ச்சியான வி‌ஷயம் தான். எங்கே திடீரென மேலும் உயர்த்தி விடுவார்களோ என்ற பயமும் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    சில நாட்களுக்கு முன்னர் வரை கூடிக்கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது சில நாட்களாக கொஞ்சம்... கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது.

    இந்த விலை குறைப்பு வாகன ஓட்டிகளை குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

    நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.97-க்கு விற்கப்பட்டது. இன்று 22 காசுகள் குறைந்து ரூ.75.97-க்கு விற்கப்பட்டது.

    இதே போல் டீசல் நேற்று ஒரு லிட்டர் ரூ.70.09-க்கு விற்கப்பட்டது. இன்று 26 காசுகள் குறைந்து ரூ.69.83-க்கு விற்கப்பட்டது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “பெட்ரோல் விலை குறைந்து வருவது மகிழ்ச்சியான வி‌ஷயம் தான். எங்கே திடீரென மேலும் உயர்த்தி விடுவார்களோ.... என்ற பயமும் உள்ளது. இதை அப்படியே கட்டுக்குள் இருந்தால் மிக நன்றாக இருக்கும்” என்று கூறினர்.

    Next Story
    ×