என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் மாயம்
    X
    வாலிபர் மாயம்

    ஈரோடு அருகே நண்பரை பார்க்க சென்ற வாலிபர் திடீர் மாயம்

    ஈரோடு அருகே நண்பரை பார்க்க சென்ற வாலிபர் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் மரப்பாலம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சண்முகம் இவரது மகன் சுரேந்தர் (வயது 21) கடந்த 26-ந் தேதி அன்று நண்பரைப் பார்த்து வருவதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பிவரவே இல்லை.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி சுரேந்திர்க்கு பிறந்தநாள் என்பதால் சுரேந்திரின் தந்தை சண்முகம் போனில் வாழ்த்து கூறியுள்ளார். அப்போது சுரேந்திரன் இரண்டு மூன்று நாட்களில் வீட்டுக்கு வந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

    இதன்பிறகு சண்முகம் தனது மகன் சுதந்திர போனில் தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரியவருகிறது. இதை தொடர்ந்து சண்முகம் கருங்கல்பாளையம் போலீசில் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

    அதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுரேந்தர் காணாமல் போன அன்று நீலக்கலரில் டி-‌ஷர்ட்டும் ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×