என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
சேவல் வைத்து சூதாட்டம் - போலீசை கண்டதும் 6 பைக்குகளை போட்டு விட்டு ஓட்டம்
அந்தியூர் அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசை கண்டதும் 6 பைக்குகளை போட்டு விட்டு தப்பி ஓடினர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள ஈச பாறை வனப்பகுதியை ஒட்டியுள்ள லைன் மாரியம்மன் கோயில் அருகே சேவல் சண்டை நடைபெறுவதாக அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபு வருண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சிலர் சேவல்களை வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அந்த இடத்தில் 2 சேவல் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த 6 இரு வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதனையடுத்து போலீசார் 2 சேவல்கள், 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story