என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாமக
    X
    பாமக

    ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல்: பாமக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி தோல்வி

    கொடுமுடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி தோல்வி அடைந்துள்ளார்.

    கொடுமுடி:

    கொடுமுடி ஒன்றியத்துக்கு உட்பட்டது கொளாநல்லி பஞ்சாயத்து இந்த பஞ்சாயத்தை சேர்ந்தவர் ராமனாதன் இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பவானி தொகுதி முன்னாள் எம்.எல் .ஏ,வாக இருந்தவர்.

    இவர் தற்போது பா.ஜனதாவில் உள்ளார். இவரின் மனைவி சுமதி இவர் கொளாநல்லி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டு 447 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட அருணாதேவி என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு 404 வாக்குகள் பெற்றார்.

    அதிமுகவை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி பேபி உருளை சின்னத்தில் போட்டியிட்டு 601 வாக்குகள் பெற்று 154 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    Next Story
    ×